மின் கட்டண கணக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இன்று காலை 10 மணி முதல் திமுகவினர் அவரவர் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிஐடி காலனியில் உள்ள அவரது வீட்டின் முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் முன்பும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.