திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே நடுவுகுடி செல்லும் சாலையில் A.மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சேகர் (51). இவர் தனது இரண்டு சங்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நசுங்கி பலியானனார்.

 

விபத்தை ஏற்படுத்திய வாகம் எது என்பது தெரியவில்லை. விபத்தில் இறந்தவருக்கு மனைவியும், 21 வயதில் மகனும், 19 வயதில் பெண் உள்ளார். இவரது உடலை பிணக்கூறு ஆய்விற்கு திருவாடானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவாடானை காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சமீப காலமாக மணல் கடத்தல் அதிகரித்து வரும் வேளையில் வாகனங்கள் அதிவிரைவாக செல்வதால் இவ்வாறு விபத்து ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Leave a Reply