நோயாளியை உறவினர்களே 1கி.மீ ஸ்ட்ரெச்சரில் தள்ளி சென்ற அவலம்..!

ஆந்திராவில் நோயாளிக்கு ஸ்கேன் எடுப்பதற்காக நடுச்சாலையில் ஸ்ட்ரக்சர் மூலம் பள்ளி சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நோயாளியை பரிசோதித்த மருத்துவர் அருகில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்துகொள்ள பரிந்துரைத்துள்ளார்.

 

ஆனால் மருத்துவமனை ஊழியர்களும் ஆம்புலன்ஸ் வர மறுத்த காரணத்தால் அந்த நோயாளியை உறவினர்கள் ஸிட்ரக்சரில் படுக்கவைத்து நடுச் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி சென்றனர். அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே வசதி என அனைத்தும் இருந்த போதிலும் நோயாளியை வெளியே அனுப்ப காரணம் என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும் நோயாளியை உறவினர்களேத் தள்ளி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply