அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இரு நாட்டவருக்குமிடையே கடுமையான கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில் சீனா அதிகாரிகளுக்கு வீசா மறுப்பு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், அமெரிக்கா பொருளாதார வல்லரசு நாடாக இருப்பது பொறுக்கமுடியாமல் சீனா தனது கம்யூனிச கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா அட்டார்னி ஜெனரல் சாடினார்.
இதற்கு பதிலளித்த சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹுவா ஜூன்னிங் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா அபாண்டமாக குற்றம் சாட்டுவது ஆகவும் அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும் அவர் சாடினார்.