ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க வாய்ப்பு உள்ளது என்று திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு 3 மாதங்களுக்கும் மேல் ஆகின்றன.

 

கொரொனாவால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றின் காரணமாக திரையரங்குகள் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதேவேளையில் ஒரு இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதிமுறையும் இருந்து வந்ததால் திரையரங்குகள் திறக்க சிறிதும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் நடிகர் நடிகைகளும், சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பெரும் வருத்தம் அடைந்துள்ளார்.

 

பெப்சி தொழிலாளர்களும் வேலையின்றி வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply