காணாமல் போன மனைவி..!தீக்குளிக்க முயன்ற கணவர்..!

காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி திண்டுக்கல் மாவட்டம் பழனி எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகளுடன் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது . மெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஹுசைன், தஸ்லிமா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தஸ்லிமா கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமானதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து மெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அங்கு நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி அலுவலகத்தில் தனது 2 குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தி அவரையும் குழந்தைகளையும் காப்பாற்றினர். பின்னர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Leave a Reply