மருத்துவமனைக்குள் புகும் மழைநீரால் நோயாளிகள் கடும் அவதி..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உஸ்மானிய மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில மணி நேரம் பெய்த மழைக்கே உஸ்மானிய அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டில் மழைநீர் புகுந்தது. இதனால் மழை நீரிலேயே நோயாளிகள் சிகிச்சை பெற கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவு நீரும் சேர்ந்ததால் நோயாளிகளும், மருத்துவர்களும் கடும் சிரமத்தை எதிர் கொண்டனர். மருத்துவர்களும் செவிலியர்களும் வார்டுகளுக்கு வருவதை தவிர்ப்பதாக குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






