--- --:--:-- --

அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கில் 92 பேர் உயிரிழப்பு..!

11.1

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. கிட்டத்தட்ட 36 லட்சம் மக்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு 90க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ளது. 1.27 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அசாமின் துப்ரி மாவட்டம் தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் ஐந்தரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

 

3,376 கிராமங்கள் நீரில் மூழ்கி இருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் 629 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசிரங்கா தேசிய பூங்காவில் இருக்கும் விலங்குகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 66 விலங்குகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 117 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளனர்.

 

அசாமை போலவே மும்பை நகரமும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செவ்வாய்க்கிழமை முதல் இங்கு கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 8 மணி வரை மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 190.12 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon