கோவையில் ரோபோடிக் எந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை அகற்றும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று துவக்கி வைப்பு !!!
கோவை மாநகராட்சி நிர்வாகம் வசதிக்காக வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு,மத்திய என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் ரோபோடிக் எந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை அகற்றும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை செயலர் சுகன்தீப்சிங் பேடி,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத்,மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள்,அலுவலர்கள் உட்பட பலர் போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் முன்னிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் நடைபெற்று வருகிறது.அரசு உயர் அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.






