கொரொனாவை விரட்ட பூஜை செய்வதாக கூறும் மந்திரவாதிகள்..! குற்றம் சாட்டும் மக்கள்..!
கொரோனா வைரசை நாட்டை விட்டே விரட்ட போவதாக சவால் விடும் இரண்டு மந்திரவாதிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்து மாலை என்பவரும் மந்திரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொரொனாவை ஒழிக்க பூஜை செய்வதாக தெரிவித்துள்ளனர். வீட்டில் பூஜை செய்தபின் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று அங்கு இவர்கள் யாகம் செய்வதாக தெரிவித்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கு சென்று யாகம் வளர்த்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லவும் அரசு அனுமதித்தால் கொரொனாவை நாட்டை விட்டு விரட்டுவதாகவும் இந்த மந்திரவாதிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






