--- --:--:-- --

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி… சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

IMG-20200715-WA0208

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் களத்தில் நின்று தீவிரமாக பணியாற்றி வந்தவர் ஆட்சியர் ராசாமணி. இதனால் கொரோனா பரவல் ஆரம்பித்த காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் பரவல் எண்ணிக்கை அதிகமாகாமல் இருக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டார். இதனால் ஒரு கட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகவும் கோவை மாறியது.

ஆனால் சமீப நாட்களாக கோவையில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 188 என பதிவானது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1480 ஆக அதிகரித்து உயிரிழப்பும் 10 என உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கும் தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

 

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ராசாமணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon