--- --:--:-- --

லடாக் எல்லையில் உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை இன்னும் அடக்கம் செய்யவிடாமல் அலைக்கழிக்கும் சீனா..!

9

கல்வான் மோதலின் போது உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் வீரர்களின் குடும்பத்தினரை சீன அரசு நிர்பந்தித்து வருவதாக அமெரிக்க உளவுத் துறை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த மாதம் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேசமயம் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையிலும் தங்கள் தரப்பு வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்களை சீனா வெளியிடவில்லை.

 

சொந்த வீரர்களின் உயிர் தியாகத்திற்கு இதுவரை எந்த அங்கீகாரமும் வழங்காத சீனா கொரொனாவை காரணம் காட்டி வீரர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் இறுதி சடங்குகளை செய்யக்கூடாது எனவும் அவரது குடும்பத்தினரை நிர்பந்தித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் சீனா தரப்பில் 35 வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாகவும் அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon