--- --:--:-- --

ஓபிசி கிரிமிலேயர் பிரிவில் பழைய நடைமுறையே தொடரும்..!

6

பழைய முறைப்படியே கிரீமிலேயர் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்.

 

இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கிரீமிலேயர் கணக்கிடும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 

அதன்படி கிரீமிலேயர் கணக்கிடுவதற்காக பெற்றோரின் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கிடக் கூடாது என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அப்படி கணக்கிட்டால் பெரும்பாலான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

எனவே கிரீமிலேயர் கணக்கிடுவதற்கு தற்போதைய நடைமுறையை தொடர வேண்டும் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon