--- --:--:-- --

சாத்தான்குளம் சம்பவம் – வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.!

9

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை மகன் கொலை வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

 

சென்னையில் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டது. சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon