--- --:--:-- --

ஆபாச படம் எடுத்து பெண்ணை ஏமாற்றி பாலியல் தொல்லை…!

6

அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் தனது ஆபாச படங்களை வாட்சப்பில் வெளியிட்டு பெயரை கலங்கப்படுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரத்யேக எண்ணுக்கு பெண் ஒருவர் தகவல் அளித்தார்.

 

விசாரணையில் கணவரால் கைவிடப்பட்ட 38 வயதான அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி சகாபுதீன் என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகியது தெரியவந்தது. இருவரும் தனிமையில் இருந்ததை சகாபுதீன் உள்ளிட்ட 3 பேர் படம் எடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் அவரின் குணம் தெரிந்து அந்தப் பெண் பிரிந்த நிலையில் பெண்ணின் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் சகாபுதீன், செய்யது அபூபக்கர் பாதுஷா, தாஸ் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சையது அலி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கீழக்கரை மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

ஏர்வாடியை சேர்ந்த பாதுஷா, அவரது சகோதரர் ஹாஜி ஆகியோர் ஆன்லைன் சேவை மையத்தில் செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்களில் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளின் செல்போன்களில் பெண்களின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுக்கும் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சேகரித்து அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி இந்த கும்பல் பணம் பறித்தது தெரிந்தது.

 

கடையிலிருந்து 4 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வகம் அனுப்பிய காவல்துறையினர் பாதுஷா, சகாபுதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon