--- --:--:-- --

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வா?

11

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் 22 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மூன்று வாரங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் 17 காசுகள் வரையிலும், டீசல் லிட்டருக்கு 11 ரூபாய் 14 காசுகள் வரையிலும் விலை உயர்ந்தன.

 

இந்த நிலையில் நேற்றும், இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கவில்லை. அதேசமயம் மானியம் இல்லாத சிலிண்டர் விலை தலைநகர் டெல்லியில் ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களில் ஆங்காங்கே உள்ள விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டு வரியைப் பொருத்து நான்கு ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

 

அதேபோல விமானங்களுக்கான எரிபொருள் விலையும் 7.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயர்வது இது மூன்றாவது முறையாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon