--- --:--:-- --

423 மீட்டர் அளவுக்கு இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா..!

38

லடாக் எல்லையில் சீனா தற்போது உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் அளவுக்கு இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்பு செய்திருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படம் சீனாவின் ஊடுருவலை தெளிவாக காட்டுவதாக உள்ளது.

 

கூகுல் எர்த் புலோவில் உள்ள அளவீட்டு கருவி சீனாவின் சொந்த உரிமை கோட்டுக்கு வடக்கே ஆற்றங்கரையில் 423 மீட்டர்இந்திய நிலப்பரப்பை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை குறிக்கிறது. இந்த உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் ஜூன் 25ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கூடாரங்களை அமைத்து உள்ளது.

 

தார்சாலை உடன் கூடியபெரிய தங்குமிடம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் சீனாவின் 14 வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதையும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon