--- --:--:-- --

ஆந்திராவில் தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயுவால் 11 பேர் உயிரிழப்பு..!

36

ஆந்திர மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இருந்து கசிந்த நச்சு வாயுவால் இரண்டு பேர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் பரவாடா என்ற இடத்தில் இயங்கிவரும் சாய்னர் பார்மா என்ற தொழிற்சாலையில் இருந்து நேற்று நள்ளிரவு பெண்சிமிட்டளோஸ் என்ற விஷ வாயு வெளியேறியுள்ளது.

 

அதனை சுவாசித்த தொழிற்சாலை ஊழியர்கள் அடுத்தடுத்த மயங்கி விழுந்து விட்டனர். உடனடியாக பணியாளர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

உடனடியாக நிகழ்வு இடத்திற்கு சென்று மீட்பு படையினர் தொழிற்சாலை எந்திரங்களை நிறுத்தி நச்சு வாயு பிற இடங்களுக்கு பரவாமல் தடுத்து விட்டனர். விஷவாயு கசிவு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் உள்ள மற்றொரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon