--- --:--:-- --

பீட்டருடனான திருமணத்தை பதிவு செய்யவில்லை எனகூறியுள்ள வனிதா!

12.1

கிறிஸ்துவ மதத்திற்கு தான் மாறும் எண்ணம் இல்லை என்றும் அதனால் பீட்டர் தனது திருமணத்தை பதிவு செய்யும் நோக்கம் இல்லை எனவும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

 

இரு தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார், பீட்டர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் விவாகரத்து பெறாமலேயே பீட்டரை தன்னிடமிருந்து பிரித்து வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி எலிசபெத் புகார் தெரிவித்திருந்தார்.

 

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக யாருடைய கவனிப்பும் இன்றி தனித்து வாழ்ந்து வந்த பீட்டர் பாலை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் யாருடைய குடும்பத்தையும் தான் பிரிக்கவில்லை என்றும் வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon