--- --:--:-- --

இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடிக்கு பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின்! அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டு!

1

இ பாஸ் இன்றி தூத்துக்குடி சென்றதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து உதயநிதி விளக்கம் அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ பாஸ் பெறாமலும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெறாமல் அவர் தூத்துக்குடி சென்றுள்ளார். அது சட்டத்திற்குட்பட்ட செயல் அல்ல என்றும் அது சட்டத்தை மீறிய செயல் என்றும் உதயநிதி ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

 

கொரொனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து சாமானிய மக்களும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதனை மீறும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon