நீதி வழங்கும் அரசியல் துணிவு தமிழக அரசுக்கு இல்லை..!
நீதி வழங்கும் அரசியல் துணிவு தமிழக அரசுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்ற முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் ஸ்டாலின் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினர் கடும் அழுத்தத்தால் முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருந்தால் உயிர் பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.






