பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று முழக்கமிட்டனர். தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர் அப்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.






