--- --:--:-- --

ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரித்தால் கொரொனா ஓடிவிடும்..!

4

கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தையும் திணற வைத்துக் கொண்டுள்ளது. அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டே வருகிறது. சில மருந்துகள் கொடுத்து கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தற்காலிக மருந்தாகவே உள்ளன.

 

இருப்பினும் அதற்கான உரிய மருந்துகளை இன்னும் எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. நிரந்தரமான ஒரு தீர்வு இல்லாமல் போய்க் கொண்டு உள்ளது. இந்த நிலையில் தொற்றுகள் அதிகமாக தமிழ்நாட்டிலும் பரவிக் கொண்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்க திணறிக் கொண்டிருக்கும் நிலையில் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை சொல்லினால் கொரோனவைரஸ் முற்றிலும் ஒழிந்துவிடும் என்று ஒருஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

 

ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்தால் கொரொனா குணமாகிவிடும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிவன் மடத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓம் நமோ நமோ நாராயண மந்திரத்தை வீட்டில் இருந்தபடியே ஜபித்தால் மருந்து மாத்திரைகள் இல்லாமல் கொரொனா ஓடிவிடும் என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon