காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்ஜோகர் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் மறைந்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என நாராயண பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.






