டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை..!
டெல்லியில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலை விட டீசலின் விலை அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் கடும்இழப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனையோடு கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாடு முழுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்கு ஒருபடி மேலாக தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்திருக்கிறது.
பெட்ரோல் விலை பத்து நாட்களில் 14 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் இரண்டு காசுகளாக உள்ளது. ஆனால் கடந்த 15ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் 62 காசுகளாக இருந்த நிலையில் பத்து நாட்களில் 6 ரூபாய் அதிகரித்து 80 ரூபாய் 6 காசாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து இருப்பது இதுவே முதல் முறையாக சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் வாடகை கார் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த மாதம் எரிபொருள் வீதார உள்ளூர் விற்பனை வரி அல்லது வேக் தொகையை மாநில அரசு கடுமையாக உயர்த்தியதும் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் இந்த பெருந்தொற்று காலத்தில் டீசல் விலை உயர்வு சிரமத்தை தருவதாக வாடகை கார் உரிமையாளர்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.






