--- --:--:-- --

பால் கலப்படத்தில் ஈடுபட்ட 3 ஆவின் ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்!

13

திருவண்ணாமலை நகரின் வேங்கைகால் பகுதியில் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்து விற்ற 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆவின் பால் ஊழியர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

ஓலைப்பாடி, கீரனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பால் ஏற்றி வந்த ஆறு நபர்கள் உட்பட 8 பேர் கூட்டாக இணைந்து தனியார் வியாபாரிகளிடம் பாலை கொடுத்து அதற்காக கணிசமான தொகையை பெற்று வந்துள்ளனர். பாலை பரிசோதனை செய்யாமல் இருக்க ஆவின் பாலகத்தில் பணியாற்றும் மூன்று பேரும் இவர்களுக்கு உதவியாக இருந்துள்ளனர்.

 

இதுகுறித்து மேலாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கிராமிய காவல்துறையினர் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 7வேன், 50 பால் கேன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கலப்படத்திற்கு உதவியாக இருந்த ஆவின் பாலக ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon