நாளை முதல் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை..!
நாளை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் மழை பொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. லட்சதீவு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டீ உள்ள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






