--- --:--:-- --

விண்வெளித்துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவு வரவேற்றுள்ள இஸ்ரோ தலைவர் சிவன்!

5

விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவை வரவேற்ற இஸ்ரோ தலைவர் சிவன் தனியார் நிறுவனங்களை சட்டபூர்வமாக ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய பிரத்யேக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது.

 

இதனை வரவேற்றுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியும் என கூறினார். நாடு தொழில்நுட்ப ரீதியில் விரைவாக வளர்ச்சி பெறும் எனவும் இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.

 

மேலும் ராக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சட்டபூர்வமாக ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon