--- --:--:-- --

அனைத்து மாவட்ட எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு நடத்தி வரும் காவல்துறை!

11

கொரொனா பாரவலால் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் பல்வேறு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ பாஸ் தேவை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசின் விதிமுறைகளை மீறி தனியார் பேருந்துகளை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகளை காவல்துறையினர் அனுமதித்ததாகவும் இதனால் அதிக பயணிகள் பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திருவாரூரில் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் ஒரு கிலோமீட்டருக்கு நடந்து சென்று அருகில் உள்ள மாவட்டத்தின் பேருந்தில் ஏறுகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் ஐ பாஸ் இல்லாதவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் பகுதிகளுக்கு பயணிப்பவர்களை கண்காணிக்க மங்கலம்பேட்டை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

 

விழுப்புரத்திற்கு செல்பவர்களை கடலூர் மாவட்ட எல்லைகளில் இறக்கி விடுவதால் அவர்கள் நடந்து சென்று விழுப்புரத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகளில் செல்கின்றன. இதனால் மாவட்ட எல்லைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon