--- --:--:-- --

கொரொனா வைரஸ் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது!

10.1

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயை தூண்டுவதற்கான ஆதாரங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளன. திசு ஆய்வுகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ள சிலரின் சான்றுகள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்திருப்பதாக நேச்சர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

 

டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் செல்களை அழிக்க தொடங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவும், நீரிழிவும் ஒன்றோடு ஒன்று மோதும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

நீரிழிவை கட்டுப்படுத்தும் செல்களை சேதப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் நீரிழிவு நோயை தூண்டுகிறது என்று மற்றொரு ஆய்வில் கூறப்பட்டிருப்பதாக நேச்சர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon