--- --:--:-- --

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசர சட்டம் – ஜனநாயகத்துக்கு விரோதமானது!

4

covid-19 நெருக்கடியைப் பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மாநில உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயக கோட்பாடுகளையும் கேலி செய்யும் மிகப் பின்னடைவான நடவடிக்கை என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியே தற்போது கேள்விக்குறியாகி இருக்கும் சூழலில் மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை கூட டெல்லியில் இருந்து நிர்வகிக்கவும், அந்த வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள் குழுக்களை கலைக்கும் அதிகாரம் பெறவும் ஓர் அவசரச் சட்டம் கொண்டு வருவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கும் ஸ்டாலின் இந்த அவசர சட்டம் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

மாநில உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்கும் வகையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திட வேண்டும் என்றும் இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்துமாறு தேவையான அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon