--- --:--:-- --

உடல் வெப்பநிலையை கணினி மூலம் கண்டறியும் வசதி

9

கொரொனா தொற்றை தடுக்கும் ஒரு பகுதியாக பயணிகளின் உடல் வெப்பநிலை பயணச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை தொடாமலேயே பரிசோதிக்கும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு துவங்கி திருச்சி வரையிலான வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

மண்டலம் விட்டு மண்டலம் செல்ல அரசு வழங்கும் இ பாஸை ரயில் நிலையத்தில் பணியாற்றும் பரிசோதகர்கள் கையில் வைத்து பார்வையிடுவதால் தொற்று பரவக்கூடிய அபாயம் இருந்தது. இதனை தடுக்கும் விதமாக தொடாமலேயே டிக்கெட்டுகளை சரிபார்க்கும் எந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல உடலின் வெப்பத்தை கணினி மூலம் கண்டறிந்து உள்ளே அனுமதிக்க கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயணிகள் மற்றும் ரயில் நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் நம்பப்படுகிறது. விரைவில் முக்கிய ரயில் நிலையங்களில் இந்த முறை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon