ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா! ஆனால் குழந்தைகளின் பெற்றோருக்கு கொரொனா தொற்று இல்லை!
மெக்சிகோவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறந்து நான்கு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்று குழந்தைகளுக்குத் தொற்று உறுதியானதை அடுத்து குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தாய், தந்தை இருவருக்கும் தொற்று உறுதியானதால் குழந்தைகளுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா உறுதி செய்யப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




