--- --:--:-- --

மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மானாமதுரையில் எழும் கோரிக்கை !

0.2

மின்சாரக் கட்டண `ஷாக்’கிலிருந்து இன்னும் பொதுமக்கள் விடுபடவில்லை. மின்வாரிய அலுவலகங்களில், கட்டணம் செலுத்துவோர் வரிசையைவிடவும், அதிகாரிகளிடம் கணக்குக் கேட்டு, விளக்கம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

‘கொரோனா’ – ஊரடங்குக்கு முந்தைய காலகட்டமான கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணம் செலுத்தியவர்கள், மீண்டும் 4 மாத இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணம் செலுத்த வந்திருப்பதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம். இதற்கிடையே, `மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியே கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 500 ரூபாய் கட்டணம் கட்டிய மின் கட்டணம் தற்போது 10 ஆயிரம் கட்டியது வேதனையடை செய்துள்ளதாக சிவகங்கையில் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

இது குறித்து மானாமதுரையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்…, ” கொரோனா சமயத்தில் வேலை இன்றி பலரும் தவிக்கின்றனர். ஆனால் தற்போது மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. காரணம் கேட்டால் எல்லோரும் வீட்டில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளீர்கள் என்று தெரிவிக்கின்றனர். மாதம் சுமார் 500க்கும் குறைவாக தான் மின்கட்டணம் கட்டியுள்ளோம். ஆனால் தற்போது 10 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வீட்டில் இருந்தோம் என்று காரணாத்தை காட்டி கட்டணத்தை உயர்த்துவது நியாயம் இல்லை. எனவே மின் கட்டணத்தில் அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்றார்.

 

மானாமதுரையை சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில்…, ” தற்போது கோடை வெயில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் காட்டப்படுவது. ஏசி வைத்திருப்பவர்களுக்கும், ஏசி இல்லாதவர்களுக்கும் ஒரே கட்டணம் தான் வந்துள்ளது. மின் வாரியத்தில் விளக்கம் கேட்டால் முறையாக பதில் தெரிவிப்பதில்லை. அவர்கள் மானாமதுரையில் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். எனவே அரசு தலையிட்டு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon