நீதிமன்ற பணிகளுக்காக வழக்கறிஞர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்!
முழு முடக்கத்தின் போது நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி என்பவர் தாக்கல் செய்த மனுவில் அலுவல் பணிக்காக செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாகவும், இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அலுவல் பணிகளுக்கு செல்ல இ பாஸ் நடைமுறை இல்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக வழக்கு விசாரணை நடைபெற்றால் ஆவணங்களை சமர்பிப்பதில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அலுவல் பணி நிமித்தமாக வழக்கறிஞர்கள் எவ்வித தடையுமின்றி சென்றுவர அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






