இந்தியா – சீனா எல்லையில் நீடித்து வரும் பதற்றம்..!
இந்தியா – சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய, சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எல்லையில் ராணுவத்தை சீனா குவித்து வருகிறது.சின்சியாங், திபெத் பகுதிகளில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்து உள்ளது.
சுகோய், ஜாக்குவார், மிரேஸ் ரக விமானங்களும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் ஸ்ரீநகர் மற்றும் லே பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.






