திமுக தலைவர் ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தை வறுத்தெடுத்துள்ள அழகிரி !!!
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.இதனால் கொரோனா வைரஸ் பரவலால் சில திமுக எம்.எல்.ஏ-க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மு.க.அழகிரி திமுக-வின் ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் சி எம்.எல்.ஏ-க்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ” கட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் தலைவர் கலைஞர் திமுக-வை ஒப்படைத்துள்ளார்.வைரஸ் பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாமல் ஒன்று கூடுவோம் வா என அழைத்ததால்காவு கொடுக்கின்றனர்.ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி உருப்பட போவதில்லை ” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும்,அவர் வெளியிட்டுள்ள மற்றுமொரு பதிவில் ” தனக்கு என்றால் தனி விமானம்.லண்டன் மருத்துவ சிகிச்சை.தலைமுறையாய் தாங்கி நிற்கும் ஏழை தொண்டன் என்றால் ‘ஒன்றிணைவோம் வா’ ன்னு பலி கொடுப்பது.கோடிஸ்வர அரசியல் முதலாளிகளை உடன் பிறப்புகள் கேள்வி கேட்பார்களா,கேட்க தான் விடுவார்களா.கூலி 200 ரூ.முடிந்தது ” என தனது பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திமுக-வின் ஒன்றிணைவோம் திட்டத்தை வறுத்தெடுத்து வருகிறார் மு.க.அழகிரி. அண்மைக் காலமாகவே திமுக தலைவர் ஸ்டாலினை பகிரங்கமாக மு.க.அழகிரி குற்றஞ்சாட்டி வருவது திமுக-வினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.






