ராகுலுக்கு பதிலடி கொடுத்த ஜெ.பி.நட்டா: கடவுள்களுக்கெல்லாம் தலைவர் பிரதமர் மோடி
ராகுல் காந்திக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதிலடி தந்துள்ளார். லக்னோவில் இருந்து பாஜக நிர்வாகிகள் இடையே மெய்நிகர் வழியில் பேசியவர் கல்வான் தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ராணுவ வீரர்களை நம்பிக்கையை நாள்தோறும் சிதைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
ராகுலின் சரண்டர் மோடி விமர்சனத்திற்கு பதிலடி தந்த ஜேபி நட்டா ராகுல் கூறியபடி பிரதமர் மோடி மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களுக்கும் தலைவராக இருப்பதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் பாஜக செயற்பட்டது போன்று தற்போது காங்கிரஸ் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை என்றும் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.






