--- --:--:-- --

லடாக் தாக்குதல் : மத்திய அரசு ஆழ்ந்து தூங்கி விட்டு பிரச்சினையை மறுப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

10.1

இந்திய ராணுவ வீரர்கள் மீது சீனா நடத்தியது திட்டமிட்ட தாக்குதல் என்றும், மத்திய அரசு ஆழ்ந்து தூங்கி விட்டு பிரச்சினையை மறுப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர் மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் பேட்டியை இணைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் இந்திய அரசு தூங்குவதற்கு நமது ராணுவ வீரர்களின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் ஆயுதம் இன்றி எல்லைக்கு அனுப்பப்பட்டதாக ஏற்கனவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தது நினைவுகூறத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon