--- --:--:-- --

மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக அலையும் மக்கள்!

5

மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நோயாளிகளின் உறவினர்கள் கூட்டமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் சங்குமணியிடம் கேட்டபோது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினாலும் மக்கள் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon