43 வருடங்களுக்கு கூகுள் மேப் மற்றும் வாட்ஸ் ஆப்பால் தனது பேரனுடன் சேர்ந்த 90 வயது பாட்டி!
மத்திய பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் கூகுள். வாட்ஸ் அப் வாயிலாக 43 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் தாமா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி ஊரடங்கின் போது ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது தனது பூர்வீகம் குறித்த தகவல்களை அவர் வசித்து வந்த குடும்பத்தினருடன் கூறியுள்ளார்.
அதனை வைத்து கூகுளில் தேடிய போது மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த கஞ்சனுர் கிராமமும் அங்கு உள்ள கடையொன்றில் தொடர்பு எண்ணும் கிடைத்துள்ளது.
அந்த கடை உரிமையாளர் மூலம் மூதாட்டியின் புகைப்படத்தை கஞ்சன் நகர் கிராமத்தில் வாட்ஸ் அப் மூலம் பரப்பிய நிலையில் மூதாட்டியின் பேரன் தனது பாட்டியை அடையாளம் கண்டு அழைத்து சென்றுள்ளான். மூதாட்டியின் கணவரும், மகனும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் 43 ஆண்டுகள் கழித்து தனது பேரனுடன் இணைந்துள்ளார்.






