--- --:--:-- --

சீனா சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளதா…இந்தியா என்ன செய்ய போகிறது?

11.3

லடாக் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, இந்திய அரசின் இணைய தளங்கள், ஏடிஎம் மையங்களை குறிவைத்து சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்திய எல்லையில் நுழைந்து கள்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உடன்பாட்டை மீறி இருக்கிறது சீனா. தற்போது மற்றொரு வழியில் இந்தியாவின் மீது சீனா தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.

 

இந்திய அரசுத் துறைகளின் இணையதளங்களை ஹேக் செய்து வைரசை பரவ விட்டு அவற்றை இயங்கவிடாமல் நிலைகுலையச் செய்யும் முனைப்பில் உள்ளது சீனா. பிற நாடுகளின் இணையதளங்களில் நுழைந்து செயலிழக்க வைப்பதற்காகவே சீன ராணுவத்தில் இயங்கும் சைபர் பிரிவை சேர்ந்த ஹேக்கர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 

இந்திய அரசின் இணைய தளங்கள் மட்டுமின்றி இந்தியாவின் வங்கிப் பரிவர்த்தனை முறைகளையும் இவர்கள் குறி வைத்து இருக்கிறார்கள். பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை செயலிழக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

 

பள்ளத்தாக்கில் அத்துமீறி தாக்குதல் நடத்திய மறுநாளிலிருந்து இந்தியாவின் மீதான சைபர் தாக்குதலை சீனா தொடங்கியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon