--- --:--:-- --

சென்னையில் ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை!

13

சென்னை எண்ணூரில் பிரபல ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். எண்ணூர் காசி கோவில் குப்பத்தை சேர்ந்தவர் சின்னமுத்து. ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த சின்னமுத்து ஆட்டோவில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னமுத்தூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

 

தகவலறிந்து வந்த இன்னொரு போலீசார் அவரது உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தப்பியோடிய கொலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon