தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இன்று 2 ஆயிரத்தை தாண்டி 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 48 பேர் (தனியார் மருத்துவனை- 10) உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 576 ஆக அதிகரித்துள்ளது. 842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 27,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 25,463 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 24,621 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




