--- --:--:-- --

மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற ‘ஆரோக்ய பாதை’ எனும் இணையதளத்தை உருவாக்கியுள்ள மத்திய அரசு!

7.1

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற ஆரோக்கியப் பாதை எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மருத்துவ உபகரணங்களை சரியான நேரத்தில் பெறுவதில் நாடு தழுவிய அளவில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.

 

குறிப்பாக ஒரு சில மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப் படாமல் இருத்தல், குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்களை மட்டுமே நம்பியிருந்தல், தரமான மருத்துவ உபகரணங்களை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் கால விரயம் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுகின்றன.

 

அதிலும் தற்போது கொரொனா வைரஸ் பரவி வரும் நிலையில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வோர், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் வகையில் ஆரோக்கிய பாதை என்ற இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

 

இதில் எந்த உற்பத்தியாளரிடம் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் உள்ளன, மற்றும் தேவை எவ்வளவு உள்ளது, வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருக்கும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon