மகாராஷ்டிரா, டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிப்பா?
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என இரு மாநில அரசுகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகமாக இருப்பதால் பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று தகவல் பரவியது.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படாது என்றும் மக்கள் எங்கும் கூட்டம் கூடாமல் அரசு கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் டெல்லியில் பொது முடக்கம் நீட்டிக்கப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர சிங் தெரிவித்துள்ளார்.






