ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பில் இமாம் பலி!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் காபூலில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற மசூதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அந்த மசூதியின் இமாம் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய இமாம்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.






