தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் புதுச்சேரியில் தென்மேற்குப் பருவக்காற்றால் என்று ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கும் வரும் 16ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.






