--- --:--:-- --

சென்னையில் எகிறி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

11

சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு 4,192 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது.

 

ஆறுதல் அளிக்கும் அம்சமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 17,738 ஆக உள்ளது. கொரொனாவிற்கு 243 பேர் உயிரிழந்த நிலையில் 12 ஆயிரத்து 175 பேர் சிக்கியுள்ளனர். மண்டல வாரியாக பார்த்தால் ராயபுரத்தில் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. அங்கு 4 ஆயிரத்து 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 192 பேரும், கோடம்பாக்கத்தில் 2,656 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக நகர் மண்டலத்தில் 2,351 பேருக்கும் அண்ணாநகர் மண்டலத்தில் 2,178 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அடையாறு மண்டலத்தில் 1,411 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,136 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். திருவொற்றியூர் மண்டலத்தில் 934 பேருக்கும், அம்பத்தூர் மண்டலத்தில் 848 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

\

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon