--- --:--:-- --

திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் – கட்டுப்பாடுகள் என்ன?

Screenshot_2020-06-08-08-27-19-911_com.android.chrome

பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. இதற்காக அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான அனுமதி இல்லை. முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பக்தர்கள் எந்தவித பூஜை பொருட்களையும் கொண்டு வரக்கூடாது. கோவிலுக்குள் விபூதி உள்ளிட்ட எந்த பிரசாதமும் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதிகளில் தொழுகைக்கு பயன்படுத்தும் பாய் அல்லது துணிகளை வீட்டிலிருந்து எடுத்து வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

பக்தர்களும் வழிபாட்டு தலம் நிர்வாகமும் இவற்றை பின்பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon